நீ வாங்கின முட்டைக்கு ...உன்னையே பிரியாணி போட்டுருக்கணும்!! வம்பிழுக்கும் எஸ்.வி.சேகர்!

S Ve Sekhar K. Annamalai Lok Sabha Election 2024
By Karthick Jun 04, 2024 02:43 PM GMT
Report

தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது.

பாஜக

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வெளியேறியதை தொடர்ந்து பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி என கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தது பாஜக.இன்று வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் பாஜக தமிழகம் புதுவை என போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் தோல்வி தான்...ஆனாலும் இது வரை பெறாத வாக்கு சதவீதம்!! சாதித்து காட்டிய அண்ணாமலை!!

தமிழகத்தில் தோல்வி தான்...ஆனாலும் இது வரை பெறாத வாக்கு சதவீதம்!! சாதித்து காட்டிய அண்ணாமலை!!


அண்ணாமலை, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ராதிகா சரத்குமார், நயினார் நாகேந்திரன் என நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்பட்ட பலரும் தோல்வியை சந்தித்துள்ளார்கள்.

உன்னையே பிரியாணி...

தொடர்ந்து தமிழக பாஜகவை விமர்சித்து வரும் எஸ்.வி.சேகர், தற்போதும் அண்ணாமலையை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு,

என் பொறந்த நாளுக்கு எங்கம்மா மசாலா ஆம்லெட் பண்ணி குடுத்தாங்கடா.

உனக்கு ஸ்கூல்ல டீச்சர் போட்டாங்களே அந்த முட்டையை வைச்சாடா.

நீ வாங்கின முட்டைக்கு உன்னையே பிரியாணி ஆக்காம விட்டாங்களே. முதல்ல இடத்தை காலி பண்ணிட்டு ஓடிடு.