ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள் - பாஜகவினர் ஆர்ப்பாட்டம் - எஸ்.வி.சேகர் விமர்சனம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் எஸ்.வி.சேகர்.
அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை வேட்பாளருமான அண்ணாமலை, தேர்தல் நாளன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த போது, கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதே குற்றச்சாட்டை மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வமும் வைத்திருந்தார். தமிழக அரசியல் களத்தில் இந்த செய்தி பெரும் விவாத பொருளாக மாறியது. குற்றச்சாட்டு வைத்தது மட்டுமின்றி பாஜகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது.
கோவையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், "நான் உயிரோடு இருக்கிறேன் என் வாக்கு இல்லை", "தேர்தலில் வாக்கு மட்டும் நீக்கப்படவில்லை ஜனநாயகமும் நீக்கிவிட்டார்கள்" போன்ற புகார்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
தலைவன் எவ்வழியோ..
ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பலரும் வாக்களித்ததற்காக கையில் வைக்கப்பட்ட மையுடன் கலந்து கொண்டனர். இது பெரும் விமர்சனத்தை பெற்றது. இந்த சூழலை தான், எஸ்.வி.சேகர் இந்த சம்பவத்தை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவருடைய பதிவில், ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்கிற அடையாள மை 10 வருஷம் முன்னாடி தேர்தல்ல போட்டதா⁉️தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி. நேர்மைதான் அடிப்படை தேச சேவைன்னு தெரியாத திருட்டுத்தனம் என குறிப்பிட்டுள்ளார்.
ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்கிற அடையாள மை 10 வருஷம் முன்னாடி தேர்தல்ல போட்டதா⁉️தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி. நேர்மைதான் அடிப்படை தேச சேவைன்னு தெரியாத திருட்டுத்தனம். pic.twitter.com/Bz1xpgbDgK
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) April 27, 2024