ஜோதிகா இடுப்பு சீன் எடுக்க..3 நாள் வெயிட் பண்ணேன் - குஷி சீக்ரெட் சொன்ன எஸ்.ஜே.சூர்யா
குஷி படத்தில் ஜோதிகாவின் இடுப்பு சீன் குறித்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மனம் திறந்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமான படங்கள் வாலி, குஷி இரண்டுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வியாபாரி, நியூ, இசை ஆகிய படங்கை இயக்கி அவரே நடிப்பில் களமிறங்கினார்.
இவர் தன்னுடைய மேக்கிங்கிலும், ஸ்க்ரீன் ப்ளேவிலும் படத்தை வேறு ஒரு தளத்துக்கு எடுத்து சென்றுவிட்டார். அதன் வரிசையில், குஷி படத்திலும் ஏகப்பட்ட அமர்க்களமான காட்சிகள் இருக்கும். இந்நிலையில் பலரது ஃபேவரைட் இடுப்பு சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அந்த இடுப்பு சீன்..
அதில், "குஷி படத்தில் அந்த இடுப்பு சீனை எடுப்பதற்காக மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டேன். விமானம் ஒன்று போக வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுக்க காத்திருந்தேன். என்னடா இவன் க்ளோஸ் அப் ஷாட் எடுக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொள்கிறானே என திட்டினார்கள். ஆனால் நான் நினைத்தபடிதான் அதை எடுத்தேன்.
அந்தப் பொறுமையும், உழைப்பும்தான் இன்றுவரை எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். கடைசியாக இசை படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்கவில்லை.
தனது நடிப்பில் ரசிகர்களை கட்டிப்போட்டு தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கினார். மெர்சல், மாநாடு படங்களில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
தற்போது, வில்லனாக நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.