ரூ.16,000 கோடியில் பிரம்மாண்ட ஹோட்டல்; 25 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை - ஏன் தெரியுமா?

North Korea World
By Jiyath Jun 20, 2024 05:54 AM GMT
Report

வடகொரியாவின் உள்ள Ryugyong என்ற பிரம்மாண்ட ஹோட்டல் பற்றிய தகவல்.

பிரம்மாண்ட ஹோட்டல்

வடகொரியாவின் தலைநகரான Pyongyang-ல் Ryugyong என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. வானளாவிய 1082 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில், 3000 அறைகள் காட்டும் திட்டம் இருந்தது. இந்த ஹோட்டலின் கட்டுமானம் கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கியது.

ரூ.16,000 கோடியில் பிரம்மாண்ட ஹோட்டல்; 25 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை - ஏன் தெரியுமா? | Ryugyong Hotel Closed After 25 Years North Korea

பின்னர் 2 வருடங்கள் கழித்து திறக்கப்படுவதாக இருந்தது. இது சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், உலகின் மிக உயரமான ஹோட்டலாக இருந்திருக்கும். ஆனால், 25 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகவே உள்ளது. 

அடுத்தடுத்து 9 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் - 10-வது பிரசவத்தில் நிறைவேறிய ஆசை!

அடுத்தடுத்து 9 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் - 10-வது பிரசவத்தில் நிறைவேறிய ஆசை!

என்ன காரணம்?

இந்த கட்டிடம் இந்திய மதிப்பில் ரூ.16,000 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. ஆனால், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வட கொரியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதால் 1997-ல் கட்டுமானம் நிறுத்தப்பட்டது.

ரூ.16,000 கோடியில் பிரம்மாண்ட ஹோட்டல்; 25 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை - ஏன் தெரியுமா? | Ryugyong Hotel Closed After 25 Years North Korea

இந்த ஹோட்டல் உள்ளே முற்றிலும் காலியாக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கட்டிடத்தில் சில குறைபாடுகளும் இருக்கிறது. இதன் லிப்ட் ஷாஃப்ட் ‘வளைந்து’ விடப்பட்டதாகவும், அதன் தளங்கள் சாய்வாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கட்டிடத்தில் எல்இடி பேனல்கள் நிறுவப்பட்டன. இதனையடுத்து வட கொரிய அரசாங்க பிரச்சாரத்திற்கான மாபெரும் திரையாக இது மாற்றப்பட்டது. மேலும், தற்போது அதற்கு ‘ஹோட்டல் ஆஃப் டூம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.