கடலுக்கு அடியில் பிரம்மாண்ட ஹோட்டல்; எங்கு தெரியுமா - மனதை மயக்கும் வீடியோ!
கடலுக்கு அடியில் அமைந்துள்ள ஹோட்டல் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
முராகா ஹோட்டல்
மாலத்தீவில் அமைந்திருக்கு ஹோட்டல் குறித்த வீடியோ ஒன்றை காரா மற்றும் நேட் தம்பதிகள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், தண்ணீருக்கு அடியில் அந்த ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.
ஆடம்பர வசதிகள் நிறைந்த தங்குமிடத்தையும் கடலுக்கு அடியில் எந்த பயமும் இல்லாமல் தங்கியிருக்கும் புதிய அனுபவத்தையும் இருவரும் பகிர்கின்றனர். அந்த வீடியோவில் இந்த ஹோட்டலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை விளக்குகிறார்.
வைரல் வீடியோ
லிஃப்டின் வழியாக கடலின் ஆழத்திற்கு செல்லும் அவர், அதிலிருந்து வெளியே வந்ததும், க்ளாஸிக்கான படுக்கையறைக்குச் செல்லும் நடைபாதையில் நுழைகிறார். ஆடம்பரமான கிங் சைஸ் படுக்கை, துல்லியமாக அடுக்கி வைக்கப்பட்ட பொருட்கள், சென்சார் மூலம் இயக்கப்படும் டாய்லட், கடல் நீர் தெரியும்படியான மேற்கூரை என ரம்மியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தற்போது வரை 75.1 மில்லியன் பார்வைகளையும் பல விதமான கருத்துகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. முராகா என்ற பெயருடைய இந்த இரண்டு மாடி ஆடம்பர ஹோட்டல் கடலுக்கு அடியில் சுமார் 16 அடியில் அமைதுள்ளது. 180 டிகிரி கூரை இதன் பெட்ரூமை மறைத்துள்ளது.
மசாஜ் செண்டர், ஃபிட்னஸ் பயிற்சி, உங்களுக்கு தேவைப்படும் உணவை சமைப்பதற்கான சமையல் கலைஞர்கள் என அனைத்து சேவையும் 24 மணி நேரமும் கிடைக்கும் படியாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.