கவாஸ்கர் கருத்து வெறும் குப்பை; இது என்ன இந்தியாவா? கொந்தளித்த ஆஸி. வீரர்
கவாஸ்கர் கூறிய கருத்து ஒன்றுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
கவாஸ்கர் கருத்து
ஆஸ்திரேலியா அணியின் பிளவு ஏற்பட்டதாலேயே ஹேசல்வுட் நீக்கப்பட்டு இருந்ததாக கவாஸ்கர் கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரியான் ஹாரிஸ்,
ஆஸ்திரேலியா அணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறுவதை நான் வெறும் குப்பையான கருத்து என்று தான் கூறுவேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறாது. இந்திய கிரிக்கெட்டில் வேண்டுமானாலும் அது நடக்கலாம்.
விளாசிய ரியான்
ஏனென்றால் நான் அங்கு அனைத்தையும் பார்த்திருக்கிறேன். ஆஸ்திரேலிய அணியில் அரசியலுக்கு இடம் கிடையாது. இதில் ஆஸ்திரேலிய ஊடகங்களும் குத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. காரணம் பெர்த் டெஸ்ட் போட்டியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை.
தற்போது நாம் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை தான் தோற்று இருக்கிறோம்.அதற்குள் விமர்சனம் செய்ய தேவையில்லை. நான் கவாஸ்கர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் கவாஸ்கர் தற்போது ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கவாஸ்கரின் கருத்து வேடிக்கையாக இருப்பதாக முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.