பிரித்வி ஷா கோலியை பார்த்து திருந்தனும் - கொதித்த ஹர்பஜன் சிங்!
பிரித்வி ஷா ஃபார்ம் குறித்து ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரித்வி ஷா ஃபிட்னஸ்
இந்திய யு19 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த பிரித்வி ஷா, மும்பையின் அடுத்த ஜாம்பவான் வீரர் என்று பார்க்கப்பட்டு வந்தார்.
ஊக்க மருந்தில் தொடங்கி பயிற்சிக்கு ஒழுங்காக வராதது வரை கடந்த 4 ஆண்டுகளில் அதிகளவில் சர்ச்சையில் சிக்கிய வீரர் இவர்தான். தற்போது கூட சையது முஸ்தாக் அலி தொடரில் அடுத்தடுத்து டக்அவுட் ஆகி வருகிறார்.
ஹர்பஜன் அறிவுரை
இந்நிலையில் பிரித்விஷாவை புகழ்ந்து பேசியுள்ள ஹர்பஜன், பிரித்வி ஷாவை பல கிரிக்கெட் விமர்சகர்களும் சச்சின் டெண்டுல்கர் போல் திறமையானவர் என்று பாராட்டினார்கள். இளம் வயதில் சச்சின் போன்ற ஜாம்பவானை ஒப்பிட்டு பேசினால் அது நிச்சயம் தேவை இல்லாத அழுத்தத்தை பிரித்விஷாவுக்கு கொடுத்திருக்கும்.
ஆனால் பிரித்விஷா விஷயத்தில் கிரிக்கெட் மட்டும் பிரச்சனை இல்லை. பல விஷயங்கள் இருக்கின்றது. நான் அவர் மீண்டும் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு முதலில் உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். நான் பார்த்த பிரித்வி ஷாக்கும் தற்போது நாம் பார்க்கும் பிரித்விஷாவுக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.
உடலும் பருமனாக மாறிவிட்டது. பிரித்விஷா யாரையாவது ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் விராட் கோலியை பார்த்து பின்பற்றட்டும் எனத் தெரிவித்துள்ளார்.