உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றிய ரஷ்யா.. நிலை என்ன?

Russo-Ukrainian War Ukraine Russian Federation Ukrainian Refugee
By Sumathi Jul 03, 2022 02:04 PM GMT
Report

உக்ரைனின் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட கிழக்கு மாகாணமான Luhansk-ல் தீவிரமான போர் மூண்டுள்ளது.

ரஷியா

உக்ரைன் நேட்டா நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்தது.

ukraine

ராணுவ கட்டமைப்புகளை தகர்ப்பதற்கான சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலை தொடங்கிய ரஷியா, ராணுவ கட்டமைப்புகளையும் தாண்டி அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள், ஆலைகள் என தனது தாக்குதல் வரம்பை நீட்டித்தது.

உக்ரைன்

இதனால் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகிற நிலை, தீராத சோகமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை ரஷிய படைகள் ஏற்கனவே கைப்பற்றி விட்ட நிலையில் 

russia

அந்த மாகாணத்தின் கடைசி முக்கிய நகரமான 'லிசிசான்ஸ்க்'கை கைப்பற்றி விட்டதாக ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். ரஷிய அதிபர் புதினிடம் பாதுகாப்புத்துறை மந்திரி செர்கே ஷோய்கு கூறும் போது,

லிசிசான்ஸ்க்

லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் மக்கள் ராணுவம் மற்றும் ரஷிய படைகள் இணைந்து நடத்திய போரில், லிசிசான்ஸ்க் நகரம் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எனக்கூறியதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கொட்டும் மழையில்..குதிரையில் ஸ்விக்கி ஊழியர் உணவு டெலிவரி - வைரலாகும் வீடியோ!