ஒரு செல்ஃபிக்கு 100 ரூபாய்..ரஷ்ய பெண்ணின் வினோத செயல்- மொத்தமாக குவிந்த இந்திய ஆண்கள்!
ரஷ்ய பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரஷ்ய பெண்
இந்தியாவைச் சுற்றிப் பார்க்க அதிக அளவில் வெளிநாட்டினர் வருவர். அப்படி வருபவர்களிடம் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்த ஏஞ்சலினா என்ற இளம்பெண் இந்தியா வந்துள்ளார்.
அப்போது தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ.100 தர வேண்டும் என்ற நிபந்தனை விடுத்துள்ளார். இதற்காக ஒரு வெள்ளை பேப்பரில் ஒரு செல்ஃபிக்கு 100 ரூபாய் எழுதி அனைவரிடம் காண்பித்துள்ளார்.
வீடியோ
இதனைத் தொடர்ந்து இந்திய ஆண்கள் பணம் கொடுத்து செல்ஃபி எடுத்து கொண்டுள்ளனர். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஏஞ்சலினா பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் மேடம், தயவுசெய்து, ஒரு புகைப்படம்? ஒரே ஒரு புகைப்படம்? என அவர்கள் தொடர்ந்து கேட்பதால் நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். எனவே, இதிலிருந்து தப்பிக்க இப்படிச் செய்ததாகக் கூறினார். இதன் மூலம் தனக்கு அதிக கிடைத்த வருமானம் கிடைத்தாக கூறினார்.