கடற்கரையில் இறந்து கிடந்த 'உளவு' திமிங்கலம்..அதிர்ச்சியில் ரஷ்யா!
ரஷ்யாவின் ஹவால்டிமிர் என்ற உளவு திமிங்கிலம் நார்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரஷியா
நார்வே கடற்கரையில் கடந்த 2019-ம் ஆண்டு வெள்ளை திமிங்கிலம் ஒன்று உடலில் கேமரா பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திமிங்கிலம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹ்வால்டிமிர் என்று பெயரிடப்பட்ட அந்த திமிங்கிலம் 14-அடி நீளமும் 2,700-பவுண்டும் எடை கொண்டது. மேலும் இது ரஷ்ய உளவு திமிங்கிலம் என்று அழைக்கப்படுகிறது.
உளவு திமிங்கிலம்
பொதுவாகத் தொலைதூர மற்றும் குளிர்ச்சியான ஆர்க்டிக் கடலில் வசிக்கும் மற்ற திமிலங்களை போலல்லாமல், ஹ்வால்டிமிர் திமிங்கிலங்கள் மனிதர்களின் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வசிக்கிறது.இந்த நிலையில் ஹ்வால்டிமிர் திமிங்கிலம் நார்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திமிங்கிலத்தின் மரணத்திற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் திமிங்கிலத்திற்கு ரஷ்யா இதுவரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.