சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலகும் ரஷ்யா : பதட்டத்தில் உலக நாடுகள்

Russian Federation NASA
By Irumporai Jul 26, 2022 04:26 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யா

இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்  பொருளாதார  தடை விதித்துள்ள  நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷியாவின் ஒத்துழைப்பை சீர்க்குலைக்கும் என ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலகும் ரஷ்யா : பதட்டத்தில் உலக நாடுகள் | Russia To Opt Out Of International Space Station

இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷியா திடீரென அறிவித்துள்ளது.

விலகிய ரஷ்யா

இதுதொடர்பாக, ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் யூரி போரிசோவ் கூறுகையில், 2024- க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

உக்ரைன் போர்

2024 க்குப் பிறகு ரஷியா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலகி, அதன் சொந்த சுற்றுப்பாதையை அமைப்பதில் கவனம் செலுத்த உள்ளது என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் கிரெம்ளின் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.