உக்ரைன் தேசியக்கொடியை பிடுங்கி எறிந்த ரஷியர் - எகுறி அடித்த உக்ரைன் எம்.பி!

United Russia Ukraine
By Vinothini May 06, 2023 07:33 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டின் பிரதிநிதிகள் சண்டை போட்டுக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சர்வதேச மாநாடு

கடந்த ஒன்றரை வருடமாக ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது.

russian-snatched-ukraine-flag

இந்நிலையில், துருக்கி தலைநகர் அங்காராவில் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61வது சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில், ரஷியா, உக்ரைன், அல்பேனியா, அர்மேனியா உள்ளிட்ட உறுப்பு நாட்கள் பங்கேற்றுள்ளன.

இருநாட்டவரும் மோதிக்கொண்டனர்

தொடர்ந்து, இந்த மாநாட்டிற்கு உக்ரைன் சார்பாக வந்த எம்.பி. ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கை, தனது உக்ரைன் நாட்டு தேசியக் கொடியை தன் கையில் பிடித்து நின்றிருந்தார்.

இதனை அதே மாநாட்டிற்கு வந்த ரஷிய நாட்டுப் பிரதிநிதி ஒருவர் பார்த்து, அதனை அவர் கையில் இருந்து சட்டென பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உக்ரைன் எம்.பி. உடனடியாக அவரை துரத்திச் சென்று அவரை அடித்து உதைத்தார்.

பிறகு அங்கிருந்த மற்ற ரஷிய பிரதிநிதிகளும் அவர்களுடன் வந்திருந்த ரஷிய அதிகாரிகளும் உக்ரைன் எம்.பி.யை தடுத்து சமாதானம் செய்தனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.