சர்ச்சையான காளி ட்வீட்; மதிக்கிறோம் - மன்னிப்பு கேட்ட உக்ரைன்!

India Ukraine
By Sumathi May 03, 2023 09:07 AM GMT
Report

காளிதேவி குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிற்கு உக்ரைன் மன்னிப்பு கோரியுள்ளது.

சர்ச்சை ட்வீட்

உக்ரைன் பாதுகாப்புத் துறையால் கலை வேலைப்பாடு என்று தலைப்பிடப்பட்டு, இந்துக் கடவுளான காளி தவறான முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவில் இணைக்கப்பட்டிருந்த படங்கள் ஒன்றில், குண்டுவெடித்து வரும் புகையின் மேலே காளியின் படம் வைக்கப்பட்டிருந்தது.

சர்ச்சையான காளி ட்வீட்; மதிக்கிறோம் - மன்னிப்பு கேட்ட உக்ரைன்! | Ukraine Minister Apologises For Goddess Kali Tweet

இந்தப்படம் இந்தியார்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், உக்ரைன் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் எமின் தபரோவா மன்னிப்பு கோரி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் மன்னிப்பு

அதில், "உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இந்து கடவுள் காளியை தவறான முறையில் சித்தரித்து ட்வீட் வெளியிட்டிருக்கிறது. நாங்கள் வருந்துகிறோம். உக்ரைன் மற்றும் அதன் மக்கள் இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை மதிக்கிறது. சர்ச்சைக்குரிய அந்த ட்வீட் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டது.

இருதரப்பு உறவு மற்றும் நட்புறவை மேலும் அதிகப்படுத்துவதற்கு உக்ரைன் தீர்மானித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வந்து சென்ற சில வாரங்களில் இந்த பதிவினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.