ரஷ்ய அதிபரை முட்டாள் என விமர்சித்த பாடகர் - மர்மமான முறையில் உயிரிழப்பு - பதற்றம்!
அதிபர் புதினை 'முட்டாள்' என விமர்சித்த ரஷ்ய பாடகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய பாடகர்
உக்ரைன் - ரஷ்யாவிற்குக் கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து போர் நடந்து வருகிறது. சுமார் 3 அண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரால் இரு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி ராணுவ வீரர்கள் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் இருப்பிடம் உள்ளிட்டவற்றை இழந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில், ரஷிய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின், உக்ரைன் மீது தொடுத்த போரை கண்டிக்கும் விதமாக அதிபர் புதினை 'முட்டாள்' என விமர்சித்த இருந்தார்.
அதிபர் புதின்
இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 10 ஆவது மாடியில் வசித்து வரும் இவர் தனது வீட்டின் ஜன்னலிலிருந்து கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பாடகர் வாடிம் ஸ்ட்ரோய்கின் தண்ணீர் அருந்துவதற்காகச் சமையலறைக்குச் சென்ற போது கால் தவறி விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக உக்ரைன் ராணுவத்தை ஆதரித்ததும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பிலிருந்ததாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
