நாய்களுக்குள் சண்டை மூட்டிய நபர்.. 475 ஆண்டுகள் சிறைத் தண்டனை - மிரளவைக்கும் சம்பவம்!
நாய் சண்டை நடத்தியதற்காக ஒருவர் 475 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாய் சண்டை
இந்தியாவில், கிடா சண்டை, சேவல் சண்டை, எருது விடுதல்,மாட்டு வண்டி பந்தயம் போன்றவை நடப்பது போல் நாய் கொண்டு போட்டி நடத்தப்படுகிறது. நாய்கள் சண்டை என்பது குழிகள் தோண்டி அதற்குள் இரு நாய்களை இறக்கி விட்டு சண்டை மூட்டி விடுவர்.
இந்த போட்டியில் ஏதாவது ஒரு நாய் இறந்தாலோ அல்லது சண்டை போட முடியாமல் நின்றுவிட்டாலோ சண்டைகள் நிறுத்தப்படும். இந்த சண்டைகள் 1 மணி நேரம் 2 மணி நேரம் கூட நடக்கும். அமெரிக்காவில் நாய் சண்டை பிரபலம். பெரும்பாலும் இந்த போட்டியில் புட் புல் ரக நாய்கள்தான் ஈடுபடுத்தப்படுகிறது.ஆனால் அமெரிக்காவில் இது சட்ட விரோதம்.
மேலும் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறுவதாகக் கூறி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் ஜார்ஜியா மகாணாத்தில் உள்ள அட்லாண்டாவை சேர்ந்த வின்செட் என்பவர் சட்டவிரோதமாக நாய்களுக்கிடையே சண்டை நடத்தி வருவதாக காவல் அதிகாரிகளுக்குப் புகார் எழுந்தது.
சிறைத் தண்டனை
புகாரின் பேரில் வின்செட் பண்ணை வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 107 புட் புல் ரக நாய்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நாய் சண்டை பற்றிய புத்தகங்களும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் 107 புட் புல் ரக நாய்களுக்குச் சண்டைப் பயிற்சி அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து இந்த வழக்கில் வின்செட்டை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 475 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.