ரூ.34 கோடிக்கு விற்கப்பட்ட பசு - அப்படி என்ன சிறப்பு?
பசு மாடு ஒன்று ரூ.34 கோடிக்கு ஏலம் சென்றுள்ளது.
பிரேசில் பசு
குறிப்பிட இன பசு மாடுகள் அதன் சிறப்பியல்புகளுக்காக அதிக விலை மதிப்பு கொண்டதாக கருதப்படும். ஜப்பானைச் சேர்ந்த வாக்யு பசு, உலகின் அதிக விலைமிக்க பசுக்களில் ஒன்று.
இதே போல் தற்போது பிரேசிலைச் சேர்ந்த Viatina-19 FIV என்ற மாரா மோவிஸ் பசு 4 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.38 கோடி) விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
1100 கிலோ எடை
தற்போது இந்த பசுவானது உலகின் விலையுயர்ந்த பசு என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இந்த விலைக்கு காரணம் இந்த பசுவானது கடும் வெப்பம் மற்றும் கடும் குளிர் என எந்த காலநிலையிலும் இனப்பெருக்கம் செய்ய பொருத்தமானவை.
இந்த பசு சுமார் 1100 கிலோ எடையுடையது என கூறப்படுகிறது. தங்களுடைய மாட்டின் மரபியலை மேம்படுத்த ஆர்வமுள்ளவர்கள், இந்த பசுவின் முட்டை செல்களை வாங்க 2.50 லட்சம் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.2 கோடி) செலுத்துகிறார்கள்.