தன் அறைக்குள் கீழே விழுந்து கிடந்த புடின்.. மோசமடைந்து உடல்நிலை, என்னாச்சு? - கமாண்டோ பரபரபப்பு தகவல்!
ரஷ்ய அதிபர் புடின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் புதினுக்கு மாரடைப்பு ஏற்படாத தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா பாதுகாப்புப் படையில் பணிபுரியும் ஒருவர், ஜெனரல் எஸ்விஆர் என்ற பெயரில் அங்கே நடக்கும் சம்பவங்கள் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் புதின் அறையில் இருந்து ஏதோ சத்தம் வந்துள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது தரையில் படுத்தபடியே புதின் இருந்துள்ளார். அங்கே அருகே மேஜை கவிழ்ந்து இருந்தது. மேலும், டிரிங்க்ஸ் மற்றும் உணவும் அங்கே சிதறிக் கிடந்துள்ளது.
சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே மேஜை மற்றும் உணவை அவர் தட்டி விட்டிருக்கலாம் என்றும் ஜெனரல் எஸ்விஆர் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெளியான தகவல்
இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையில் எப்போதுமே மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்களை அழைத்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிபர் மாளிகையிலேயே மருத்துவ வசதிகளைக் கொண்ட அறைக்கு புதினை மருத்துவர்கள் கொண்டு சென்றனர். ச
ரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டதால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் சிறிது நேரத்தில் புதின் சுயநினைவு பெற்றார் என்று கூறினார். இதனை ரஷ்ய அதிபர் மாளிகை ஒப்புக் கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை.
புதின் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக உயர்மட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புதினுக்கு எதாவது ஏற்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்து விரைவில் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.