ரஷ்ய அதிபர் புதினுக்கு மூளையில் அறுவை சிகிச்சை - பரபர தகவல்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் புதின்
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த சில மாதங்களாக போர் தொடுத்துள்ளது. அது இன்றளவும் நீடித்து வருகிறது. உலக நாடுகள் இதனை எதிர்த்து கோரிக்கை வைத்தும் ரஷ்ய அதிபர் அதை கண்டுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் ரஷ்ய படைகள் உக்ரைனின் தெற்குபகுதி நகரத்தில் இருந்து திடீரென திரும்பப் பெறப்பட்டன. இந்த அறிவிப்பு ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி மற்றும் ராணுவ கட்டுப்பாட்டு அறையில் இருந்து வெளியானது.
மூளை அறுவை சிகிச்சை
அங்கு ரஷ்ய அதிபர் புதின் இல்லை. அதனைத் தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை. அப்போது அவர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
அதனையடுத்து, மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு புதின் பேசியபோது, படையின் பின்வாங்கல் குறித்த எந்த தகவலும் கூறவில்லை. இவரது இந்த மெளனம் உடல்நிலை குறித்து பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.