அர்ஜெண்டினாவுக்கு விரையும் ரஷ்ய கர்ப்பிணிகள் - என்ன காரணம்
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய கர்ப்பிணிகள் அர்ஜெண்டினா சென்றுள்ளனர்.
ரஷ்ய கர்ப்பிணிகள்
அர்ஜெண்டினாவில் யாராவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்தக் குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கி விடுவது வழக்கம். இதனால், ஆயிரக்கணக்கான ரஷ்ய கர்ப்பிணிப் பெண்கள் அர்ஜெண்டினாவில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் என விசா பெற்றுக்கொண்டு அங்கு செல்லும் நிறைமாத கர்ப்பிணிகள் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்களாம். இது அர்ஜெண்டினா அரசுக்கு சிக்கலாகியுள்ளது.
அர்ஜெண்டினா விரைவு
அர்ஜெண்டினாவில் குழந்தை பெற்றுக்கொள்ளவதன் மூலம் அந்நாட்டு பாஸ்போர்ட்டை பெற முடியும் என்பதற்காக அவர்கள் அங்கு செல்வதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இது போன்ற நுழைவுகளை கண்காணிக்கவும் தடுக்கவும்
அந்நாட்டு குடியுரிமை துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 3 மாதத்தில் 5 ஆயிரம் பேர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.