சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் உணவு உண்ணலாமா? - வெளியான முக்கிய தகவல்

By Thahir Oct 25, 2022 06:40 AM GMT
Report

இன்று சூரிய கிரகணம் நிகழ்வு நடைபெறும் நேரத்தில் செய்யக் கூடியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் சற்று விரிவாக பார்க்கலாம் .

இன்று சூரிய கிரகணம் 

தீபாவளிக்கு மறுநாளான இன்று சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்தியாவின் சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணிக்கு தென்படும். மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். மொத்தம் 1 மணி 45 நிமிடங்கள் சூரிய கிரகணம் தென்படும்.

மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். சென்னையில் மாலை 5.13 மணியில் இருந்து மாலை 5.45 மணி வரை தென்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Can pregnant women eat food during solar eclipse?

சென்னை, கோவை, ஊட்டி, மற்றும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்யக்கூடாதவை 

வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது.

அதற்கென இருக்கக்கூடிய கண்ணாடிகளைக் கொண்டு பார்க்கலாம்.

கர்ப்பிணிகள் கிரகண சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது.

கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது.

முடிந்தவரை குலதெய்வத்தையும் – முன்னோர்களையும் – இஷ்ட தெய்வத்தையும் வணங்குதல் நலம்.

1 வயதிற்கு குறைவான குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது.

கிரகணம் முடிந்தவுடன் வீட்டினை கோமியம் – மஞ்சள் பொடி கலந்த நீரினால் சுத்தம் செய்வது நன்மை தரும்

கிரகணத்திற்கு பிறகு எந்தெந்த நக்ஷத்ரகாரர்களுக்கு பிடித்திருக்கிறதோ அவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும் ?

கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை பல கூறப்பட்டாலும், செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் இறைவழிபாடு.

இந்த நேரத்தில் நாம் இறைவழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன் சாதாரண நாட்களை விட பல மடங்கு அதிகம்.

கிரகணத்தின் போது சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது

சூரிய கிரகணத்தின் போது, நம் உடலின் செரிமானமான உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் செரிமானம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக நாம் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அது நம் செரிமானப்பையில் தங்கி நச்சுகளை உருவாக்கும்.

நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருக்க முடியாவிட்டால் என்ன செய்வது?

நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணி அல்லது வயதானவர்கள் இந்த விதிகளை பின்பற்றுவதில் சிரமம் இருக்கும். இவர்கள் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சிரமம் இருக்கும் என்பதால் சில விதிவிலக்குகளைப் பின்பற்றலாம்.

கர்ப்பிணிகள் உணவு உண்ணலாமா?

சூரிய கிரகணத்தின் போது, நம் உடலின் செரிமானமான உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் செரிமானம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக கர்ப்பிணிகள் கடும் சிரமப்படுவார்கள் ஆகவே அந்நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது. ஆனால் இதற்கு அறிவியல் விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.