டிரம்ப் மனைவியின் நிர்வாண படங்களை ஒளிபரப்பும் ரஷ்யா சேனல் - நெட்டிசன்கள் கண்டனம்
ரஷ்ய சேனலில் டிரம்ப் மனைவி மெலனியாவின் நிர்வாண படங்கள் ஒளிபரப்பட்டுள்ளது.
டொனால்டு டிரம்ப்
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த(05.11.2024) அன்று நடைபெற்றது.
இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
மெலனியா டிரம்ப்
வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.
இதனிடையே டிரம்ப் வெற்றிபெற்ற தகவல் கிடைத்தவுடன் ரஷ்யா மக்களால் அதிகம் பார்க்கப்படும் ரஷ்யா-1 நெட்வொர்க் சேனலில், சுமார் ஒரு மணி நேரம் மெலனியா டிரம்பின் நிர்வாண படங்கள் ஒளிபரப்பப்பட்டதாக ரஷ்யா மீடியா மானிட்டர் அமைப்பின் நிறுவனர் ஜூலியா டேவிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பேசும் ரஷ்ய செய்தி வாசிப்பாளர், "மெலனியாவின் கணவர் வெற்றி பெற்று 2வது முறையாக வெள்ளை மாளிகைக்கு செல்ல உள்ளார். அமெரிக்காவின் வருங்கால முதல் பெண்மணி 2000 ஆம் ஆண்டு எப்படி உள்ளார் என்பதை காணலாம் என கூறி மெலனியா டிரம்பின் நிர்வாண படங்களை ஒளிபரப்பியுள்ளனர்.
மெலனியா பதிலடி
டிரம்ப் வெற்றி பெரும் போது, மெலனியாவின் பழைய படங்களை ஏன் ஒளிபரப்ப வேண்டும்? இது ரஷ்யாவின் மோசமான செயல் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டு பிரபல இதழுக்கு மெலனியா நிர்வாண போட்டோஷூட் நடத்தியிருந்தார். அந்த படங்களையே ரஷ்யா இப்போது ஒளிபரப்பியதாகத் தெரிகிறது. அதன் பிறகு 2005 ஆம் ஆண்டுதான் டொனால்டு டிரம்ப்பை திருமணம் செய்து கொண்டார்.
தேர்தலுக்கு முன்னரே இந்த படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டது. "நான் ஒரு காலத்தில் நிர்வாண மாடலிங் செய்தேன். அது குறித்து நான் பெருமைப்படவே செய்கிறேன். அதை மனித உடலின் கொண்டாட்டமாகவே நான் பார்க்கிறேன்" என மெலனியா டிரம்ப் இதற்கு பதிலடி கொடுத்தார்.