67 நாள்கள் நடுக்கடலில் தத்தளிப்பு - 2 சடலங்களுடன் இருந்தவர் உயிருடன் மீட்பு!
நடுக்கடலில் இரு சடலங்களுடன் இருந்தவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
67 நாட்கள் போராட்டம்
கிழக்கு ரஷ்யாவின் ஓகோட்ஸ்க் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடி படகு ஒன்று சகலின் தீவிலிருந்து 1000 கிலோகீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
அதில், 46 வயது நபர் ஒருவர் உயிருடனும், இறந்த மனிதரின் உடலும், 15 வயது சிறுவனின் உடலும் இருந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, இவர்கள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டபோது ஹெலிகாப்டர் உதவியுடன் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
உயிர் பிழைத்த அதிசயம்
இதுகுறித்து உயிர் பிழைத்த நபரின் மனைவி கூறுகையில், அவர்கள் மூவரும் திமிங்கலத்தைப் பார்பதற்காக இரண்டு வாரத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் கடலுக்குச் சென்றுள்ளனர். தற்போது அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Survivor Found After 67 Days Adrift, Brother and Nephew Dead
— Russian Market (@runews) October 15, 2024
The dramatic rescue of a man who had been drifting at sea for nearly two months on his way to Sakhalin unfolded off the coast of Kamchatka. A fishing vessel crew discovered the boat in the Sea of Okhotsk, near… pic.twitter.com/Srcmj5G7uc
அவர் இதுவரை எதுவும் பேசாத நிலையில், படகில் இருந்து மீன்களைப் பிடித்துத் தின்று அவர் உயிர் வாழ்ந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.