நடுக்கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல் - கப்பலில் இருந்த 13 இந்தியர்களின் நிலை என்ன?
ஓமன் அருகே கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்துள்ளது.
ஓமன்
பிரெஸ்டீஜ் பால்கன் எனும் எண்ணெய் கப்பல் துபாயில் இருந்து ஏமன் நாட்டின் துறைமுகமான ஏடன் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் கவிழ்ந்துள்ளது.
கப்பலில் பணியாற்றியவர்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளை ஓமன் கடல் பாதுகாப்பு மையம் தொடங்கியுள்ளது. இந்த கப்பலில் 13 இந்தியர்கள், 3 இலங்கையர்கள் உட்பட மொத்தம் 16 பேர் பணியாற்றி வருகின்றனர்.
எண்ணெய் கசிவு
கப்பல் தலைகீழாக கவிழுந்துள்ள நிலையில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
2017 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கப்பல் 117 மீட்டர் நீளமுடையது. இத்தகைய சிறிய கப்பல்கள் பொதுவாக குறுகிய கடலோரப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.