எஞ்சினில் பற்றி எரிந்த தீ; இரையான விமானம் - 95 பயணிகளின் நிலைமை என்ன?

Turkey Fire Flight Russia
By Sumathi Nov 25, 2024 09:00 AM GMT
Report

விமான எஞ்சினில் இருந்து திடீரென தீ பரவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஞ்சினில் கோளாறு

ரஷ்ய நிறுவன தயாரிப்பான சுகோய் சூப்பர்ஜெட் 100 (Sukhoi Superjet 100 A45051) விமானம், துருக்கியில் உள்ள அந்தாலையா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தது.

Sukhoi Superjet 100 catches Fire in Turkey

அப்போது எஞ்சினில் திடீரென கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதனால் உடனடியாக விமானம் சில நொடிகளில் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமான விபத்து, 40 நாட்கள் கழித்து மீண்டு வந்த 4 குழந்தைகள் - நிகழ்ந்த அதிசயம்!

விமான விபத்து, 40 நாட்கள் கழித்து மீண்டு வந்த 4 குழந்தைகள் - நிகழ்ந்த அதிசயம்!

பயணிகள் நிலை?

இதன்மூலம் 89 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என 95 பேர் காப்பாற்றப்பட்டனர். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

இதனையடுத்து தற்போது இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 5 நிமிடம் முன்னதாக விமானம் தீப்பற்றி இருந்தால், மிகப்பெரிய சோகத்திற்கு வழிவகை செய்திருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.