வானில் பறந்த விமானம்..சில நொடிகளில் வெடித்து சிதறிய என்ஜின் - பதைபதைக்கும் சம்பவம்!
விமானம் புறப்பட சில நொடிகளில் என்ஜின் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
பறந்த விமானம்
கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் கனடா விமானம் கிளம்பியுள்ளது. அந்த விமானம் 389 பயணிகள் மற்றும் 13 பணியாளர்கள் கொண்டு பாரிஸ் நோக்கிப் புறப்பட்டது. பறப்பதற்கு முன்பு வரை அங்கு எல்லாம் வழக்கம் போலவே இருந்துள்ளது.
ஆனால், விமானம் பறக்கத் தொடங்கிய சில நொடிகளில் அதில் உள்ள என்ஜின் வெடித்துச் சிதறி இருக்கிறது. இதனையடுத்து, உடனடியாக விமானம் திருப்பப்பட்டு மீண்டும் டொராண்டோ விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
சிதறிய என்ஜின்
என்ஜின் வெடித்ததை சுதாரித்த விமானி துரிதமாக செயல்பட்டு விமானத்தைத் தரையிறக்கியதால் உள்ளே இருந்த அனைவரும் உயிர்தப்பினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஒருவேளை சின்ன நடந்திருந்தாலும் விமானம் மிக மோசமான விபத்தை சந்தித்திருக்கும். இந்த அதிர்ச்சி சம்பவம் நள்ளிரவில் நடந்துள்ளது.
அப்போது புறப்பட்ட விமானத்தில் திடீரென வலது என்ஜினில் இருந்து தீப்பொறிகள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தங்கள் கேமராவில் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதேசமயத்தில், சரியாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய பைலட்கள்,
விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஏர் கனடா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விமானம் வழக்கம் போலத் தரையிறங்கியது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்ட போதிலும் அதற்கான தேவை ஏற்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.