வாக்குச்சீட்டில் பெண் எழுதிய ஒரு வார்த்தை - சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
வாக்குச்சீட்டில் 'போர் வேண்டாம்' என எழுதிய பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போர் வேண்டாம்
ரஷ்யாவில் கடந்த மார்ச் 15 முதல் 17 வரை அதிபர் தேர்தல் நடைபெற்றது, இந்த தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புதின் 87.32 சதவிகித வாக்குகள் பெற்று 5-வது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அலெக்ஸாண்ட்ரா என்ற பெண் வாக்குச்சீட்டில் 'போர் வேண்டாம்' என எழுதி வாக்களித்துள்ளார்.
சிறைத்தண்டனை
இதனால் அந்த பெண்ணை கைது செய்த ரஷ்ய காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் "இந்த செயல் நம் நாட்டையும், நம் நாட்டு படைவீரர்களையும் அவமானப்படுத்தியிருக்கிறது.
அதற்காக அலெக்ஸாண்ட்ராவிற்கு 440 யூரோக்கள் அபராதம் மற்றும் 8 நாள்கள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிடப்படுகிறது" என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு 'ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குகிறது' என பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.