Chubby கன்னம் பிடிக்கல.. கணவனுக்காக பட்டினி கிடந்து மாறிய மனைவி - அதிரவைக்கும் சம்பவம்
கணவனுக்காக பெண் ஒருவர் உடல் எடை குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.
கணவன் ஆசை
ரஷ்யா, பெல்கிரேடில் பகுதியைச் சேர்ந்தவர் யானா பாப்ரோவா. இவர் கொழு கொழுவென உடல் எடை அதிகமாகதான் இருந்துள்ளார். இதனால் ல்லூரி காலத்தில் இருந்தே உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்துள்ளார்.

தொடர்ந்து அவருக்கு திருமணம் நடந்துள்ளது. அவரது கணவரும் தோற்றம் குறித்து ஏளனமாக பேசியுள்ளார். உனது கண்ணம் கொழு கொழுவென பருமனாக உள்ளது என்று கூறியுள்ளார்.
விபரீத முடிவு
இதனால் விரக்தியடைந்த பெண் உடல் எடையை குறைத்தே தீர வேண்டும் என முடிவெடுத்துள்ளார். பிஸ்கட், டீ, சாக்லேட் போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டு தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து தற்போது எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், 22 கிலோ தான் இருக்கிறாராம். இதனால் வேலையும் பறிபோகியுள்ளது. கணவனும் பிரிந்து சென்றுள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மனநல சிகிச்சையும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.