ஆண்களுக்கும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை - ரஷ்யா வெறிச்செயல்!

Russo-Ukrainian War Sexual harassment Russian Federation Child Abuse
By Sumathi Oct 17, 2022 05:15 AM GMT
Report

போரில் வெல்ல ரஷ்யா, உக்ரைன் பெண்களிடம் மோசமாக நடந்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போர்

ரஷ்யா போரில் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதாக ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், "உக்ரைன் போரில் ரஷ்யா மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அங்கு மிகவும் மோசமான மனிதாபிமானமற்ற பாலியல் குற்றங்கள் நடந்து உள்ளன.

ஆண்களுக்கும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை - ரஷ்யா வெறிச்செயல்! | Russia Sexual Assault As War Strategy In Ukraine

அதற்கான அறிகுறிகள் இருக்கவே செய்கின்றனர். ரஷ்யா வீரர்கள் உக்ரைன் நாட்டுப் பெண்களைக் குறிவைத்து பலாத்காரம் செய்கிறார்கள். அவர்கள் இதையே போர் உத்தியாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்காக அவர்கள் தங்கள் வீரர்களுக்கு வயாகரா போன்ற மாத்திரைகளைக் கூட சப்ளே செய்கிறார்கள்.

 வயாகரா  சப்ளே

உக்ரைன் நாட்டில் இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தைப் பகிர்ந்து கொண்டு உள்ளனர்" என்றார். வயாகரா மாத்திரை மூலம் ஆண்களுக்கு பாலியல் உணர்வுகளை அதிகம் துண்ட முடியும். ரஷ்ய ராணுவமே இதைத் தனது வீரர்களுக்கு இதை சப்ளே செய்கிறது.

ஆண்களுக்கும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை - ரஷ்யா வெறிச்செயல்! | Russia Sexual Assault As War Strategy In Ukraine

அங்கு பெண்கள் கடத்தி செல்லப்படுகிறார்கள். பல நாட்கள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். ஆண்கள் மட்டுமில்லை, சிறுவர்களையும் ஆண்களையும் கூட அவர்கள் பலாத்காரம் செய்கிறார்கள். ஆண்களுக்கும் பிறப்புறுப்பு சிதைவு போன்ற நோய்கள் அங்கு ஏற்படுகிறது.

பாலியல் பலாத்காரம்

இது ஒரு ராணுவ பிளான் தான் என்பதில் சந்தேகம் இல்லை. பலாத்காரம் செய்யப்பட்ட உக்ரைன் பெண்கள் பலரும் ரஷ்யா ராணுவ வீரர்களிடம் வயக்ரா இருப்பதைப் பார்த்து உள்ளனர். பாலியல் பலாத்காரத்தின் போது உக்ரைன் பெண்களிடம் ரஷ்ய வீரர்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது இது ரஷ்யாவின் மனிதநேயமற்ற கீழ்த்தரமான திட்டம் என்பது உறுதியாகிறது.

இது தொடர்பாக ஐநாவும் கூட அறிக்கை அளித்து உள்ளது போர் தொடங்கியது முதல் 100க்கும் மேற்பட்ட சம்பவங்களை ஐநா பதிவு செய்து உள்ளது. இதைப் போரின் ஒரு பகுதியாகவே ரஷ்யா திட்டமிட்டுப் பயன்படுத்துகிறது.

100க்கும் மேற்பட்ட பலாத்கார சம்பவங்களை ரஷ்யாவே உறுதி செய்து உள்ளது. இந்த அறிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது ரஷ்யப் படைகள் கீழ்த்தரமான குற்றங்களைச் செய்து உள்ளது உறுதியாகி உள்ளது. நான்கு வயது சிறுமி தொடங்கி 82 வயது முதியவரை வரை யாரையும் விடாமல் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.