இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு!

India Russian Federation
By Sumathi Sep 26, 2022 06:23 AM GMT
Report

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

ஐ.நா. பொதுச் சபையின் 77-வது ஆண்டுக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேசியதாவது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் பாதுகாப்புக் கவுன்சில் ஆகியவை சமகால உண்மைநிலவரங்களைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு! | Russia Pitches India For Permanent Membership

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், அந்த கவுன்சிலை மேலும் ஜனநாயகப்படுத்த முடியும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடாகும்.

 ரஷ்யா  ஆதரவு

இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள். அவை பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற முழுத் தகுதி உடையவை. எனவே, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்படுவதற்கு ரஷ்யா தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராகவும், பிரேசில், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினராகவும் உள்ளன.