41 வருஷம்.. நிலவில் விழுந்து நொறுங்கிய விண்கலம்; இதனால் தான் - ராஸ்காஸ்மாஸ் விளக்கம்!

Russia
By Sumathi Aug 21, 2023 03:08 AM GMT
Report

லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது.

லூனா-25 

ரஷ்யா கடந்த 1976-ம் ஆண்டு லூனா-24 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அதன்பின்னர், 47 ஆண்டுகள் கழித்து, கடந்த 11-ம் தேதி சோயுஸ் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பியது.

41 வருஷம்.. நிலவில் விழுந்து நொறுங்கிய விண்கலம்; இதனால் தான் - ராஸ்காஸ்மாஸ் விளக்கம்! | Russia S Luna 25 Spacecraft Crashes On Moon Reason

பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதைகளை முழுமையாக கடந்து செல்லாமல், குறுக்கு வழியில் விரைவாக சென்று நிலவை 10 நாளில் நெருங்கியது. நிலவின் தென்துருவ பகுதியில் இன்று தரையிறக்க ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ‘ராஸ்காஸ்மாஸ்’ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.

தகவல் தொடர்பு

இதனால், ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக, லூனா-25 விண்கலத்தின் தகவல் தொடர்பு துண்டானது. விண்கலத்தை கண்டுபிடிக்கவும்,

41 வருஷம்.. நிலவில் விழுந்து நொறுங்கிய விண்கலம்; இதனால் தான் - ராஸ்காஸ்மாஸ் விளக்கம்! | Russia S Luna 25 Spacecraft Crashes On Moon Reason

அதை மீண்டும் தொடர்பு கொள்ளவும் கடந்த 2 நாட்களாக மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, நிலவின் இறுதிகட்ட சுற்றுப் பாதையைவிட்டு விலகி கீழே விழுந்து நொறுங்கியது.

ரஷ்யாவின் விண்வெளி ஆய்வுப் பணியில் இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதற்கான காரணங்களை ஆராய சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக ராஸ்காஸ்மாஸ் அறிக்கையில்தெரிவித்துள்ளது.