புடின் கொல்லப்படுவார்; ரஷ்யா சிதறும் - கணித்த அமெரிக்க உளவுத்துறை

Vladimir Putin Russo-Ukrainian War
By Sumathi May 02, 2023 05:37 AM GMT
Report

20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் நிலைமை

டிசம்பரில் இருந்து, ரஷ்யா 1, 00,000-க்கும் அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும், இதில் 20,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.

புடின் கொல்லப்படுவார்; ரஷ்யா சிதறும் - கணித்த அமெரிக்க உளவுத்துறை | Russia Putin Killed Us Expert Opinion

மேலும், புடின் சிறுபான்மை இனத்தவர்களை தனது போருக்காக பயன்படுத்திக்கொள்வதாகவும், அவர்களில் ஏராளமானோர் உயிரிழந்தது, புடினுக்கே பாதகமாக திரும்பும் என்றும் சிலர் கணித்துள்ளனர்.

உளவுத்துறை கருத்து

இந்நிலையில், புடின் கொல்லப்படுவார். அத்துடன், எப்படி 1991ஆம் ஆண்டு, சோவியத் யூனியன், 15 புதிய நாடுகளாக உடைந்ததோ, அதேபோல ரஷ்யாவும் உடைந்து சிதறும் என அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணரான Paul Goble தெரிவித்துள்ளார்.

புடின் கொல்லப்படுவார்; ரஷ்யா சிதறும் - கணித்த அமெரிக்க உளவுத்துறை | Russia Putin Killed Us Expert Opinion

இதற்கிடையில், உக்ரேனியர்களை மீண்டும் கடினமாக்கும் தகவல்களை பொது தளத்தில் நான் வெளியிடப் போவதில்லை என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி ஜான் கிர்பி கூறியுள்ளார்.