புற்றுநோய் தீவிரம்.. விரைவில் புடின் இறந்துவிடுவார் - உக்ரைன் உளவுத்துறை ஷாக் தகவல்
அதிபர் புடின் விரைவில் இறந்து விடுவார் என உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவல் அளித்துள்ளார்.
உடல்நிலை மோசம்
ரஷ்ய அதிபர் புடினுக்கு உடல்நிலை மோசமாகி கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு தைராய்டு கேன்சர் ஏற்பட்டதாகவும், சரும புத்துணர்ச்சிக்காக அவர் மானின் ரத்தத்தில் குளிக்கும் சிகிச்சையை மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு சேவையில் பணியாற்றி வெளியேறிய ஒரு அதிகாரிக்கு ரஷ்ய உளவாளியிடம் இருந்து கிடைத்த தகவலின்படி புடின் தலைவலியால் அவதிப்படுகிறார். அவர் டிவியில் தோன்றும் போது அவர் பேச வேண்டியதை ஒரு பேப்பரில் பெரிய எழுத்துகளில் எழுதி கொடுக்க கூறுகிறார்.
உக்ரைன் தகவல்
இதற்கு காரணம் அவரது பார்வை மங்கி வருகிறது.எனினும் அவர் கண்ணாடி அணியவில்லை. ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரது கால்கள் அவ்வப்போது ஆடின. அது கேமராவில் கூட பதிவாகியிருந்தது. புடின் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் வாழ்வார் எனக் கூறப்பட்டிருந்தது.
மேலும், கிரிலோ புடானோவ் கூறுகையில் புடினுக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளது. இந்த தகவல் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து எங்களுக்கு வந்துள்ளது.
அவர் நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். புடினுக்கு வேறு ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா என்பதை என்னால் கூற முடியாது என தெரிவித்தார்.