உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி : உளவுத்துறை அதிகாரி பரபரப்பு தகவல்

By Irumporai May 24, 2022 01:15 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ரஷ்ய அதிபர் புதினை உக்ரைன் போருக்கு பிறகு கொலை செய்ய முயறச்சிகள் நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான போர் . கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நிலையில் 3 மாதத்தை கடந்து நடைபெற்று வருகிறது. உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் பொருளாதார தடைகள் இருந்தபோதிலும், போர் நடவடிக்கைகளிலிருந்து ரஷிய அதிபர் புதின் எந்த நேரத்திலும் பின்வாங்கவில்லை

இந்த நிலையில், ரஷ்ய அதிபர்  புதினை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றதாகவும்  ஆனால் அவர் தப்பிவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலை உக்ரைன் உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் ஒரு  தொலைக்காட்சி ஒன்றில் கூறியதாவது :

பிப்ரவரியில் ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு புதினை படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள காகசஸ் பிராந்தியத்தின் பிரதிநிதிகளால் ரஷ்ய அதிபர் தாக்கப்பட்டார்.

ஆனால், இந்த கொலை முயற்சியில் இருந்து புதின் தப்பிவிட்டார். இது உண்மையில் நடந்த சம்பவம்'' என்று தெரிவித்தார். இருப்பினும் இதுபற்றி இன்னும் ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. எனினும், இதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் உகரைன் மேஜர் முன்வைக்கவில்லை.