பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை - புதிய திட்டம்
பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக் கொள்ள ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
பிறப்பு விகிதம் சரிவு
ரஷ்யாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இதனால் பல்வேறு வரி விலக்குகள், உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின், 10 மாகாணங்களில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவியர் குழந்தை பெற்று வளர்ப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித் தொகையை அந்நாட்டு அரசு வழங்குகிறது.
அரசு திட்டம்
கடந்த மார்ச் மாதம், முதன் முதலில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட போது, பெண்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டது. இப்போது பள்ளி மாணவிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். 43 சதவீத ரஷ்யர்கள் இந்தக் கொள்கையை ஆதரிக்கின்றனர்.
அதே சமயம் எதிர்ப்பும் கிளம்பி சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் ரஷ்யா - உக்ரைன் போரினால் ரஷ்யாவில் கிட்டத்தட்ட 2.5 லட்ச ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.