எகிப்து மன்னரின் கல்லறையில் இருந்து கேன்சருக்கான மருந்து - சுவாரஸ்ய ஆய்வு முடிவு

Cancer United States of America Egypt
By Sumathi Jul 04, 2025 02:30 PM GMT
Report

எகிப்து மன்னரின் கல்லறையில் இருந்து புற்றுநோய்க்கான புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புற்றுநோய் மருந்து

எகிப்தை ஆண்ட மன்னன் துட்டன்காமனின் தங்க கல்லறையை கடந்த 1920ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அவற்றை ஆய்வு செய்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

எகிப்து மன்னரின் கல்லறையில் இருந்து கேன்சருக்கான மருந்து - சுவாரஸ்ய ஆய்வு முடிவு | Cancer Medicine Found In Egyptian King Tomb

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கல்லறையை திறந்தபோது அதிலிருந்த பூஞ்சை தாக்குதலால் தான் அவர்கள் உயிரிழந்தார்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பூஞ்சையில் இருந்து புற்றுநோயை தடுப்பதற்கான மருந்தை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பருவ வயதை அடைந்ததும் உடல் பாகத்தை வெட்டும் பெண்கள் - ஏன் தெரியுமா?

பருவ வயதை அடைந்ததும் உடல் பாகத்தை வெட்டும் பெண்கள் - ஏன் தெரியுமா?

சுவாரஸ்ய தகவல்

இந்த பூஞ்சையில் உள்ள அஸ்பெரிஜிமைசின்ஸ் (asperigimycins) எனப்படும் நான்கு மூலக்கூறுகளை விஞ்ஞானிகள் பிரித்தெடுத்து ஆராய்ந்ததில், இரத்தப் புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் `லுகேமியா (leukemia) புற்றுநோய் செல்கள் பெருகாமல் தடுப்பதை கண்டறிந்தனர்.

egyptian king tutankhamuns tomb

இந்த மூலக்கூறுகள் `லிபிட்ஸ்’ (lipids) எனும் கொழுப்பு மூலக்கூறுகளுடன் கலக்கும்போது, இன்சுலின் போன்று தற்போது பயன்படுத்தப்படும் புற்றுநோய் மருந்துகளுக்கு இணையாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக இந்த மருந்தை விலங்குகள் மீது சோதித்து பார்த்த பிறகு, மனிதர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.

இது எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், இதில் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.