ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட உக்ரைனில் ராணுவச் சட்டம் - ரஷ்யா அதிரடி!

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Sumathi Oct 20, 2022 05:35 AM GMT
Report

உக்ரைனில் ஆக்கிரமைப்பு செய்யப்பட்ட பகுதிகளில் ரஷ்யா ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

உக்ரைன் பகுதிகள்

உக்ரைனுடன் போர் தொடுத்துள்ள ரஷ்யா, அதன் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா பகுதிகளை கைப்பற்றி, அவற்றை தனது நாட்டுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட உக்ரைனில் ராணுவச் சட்டம் - ரஷ்யா அதிரடி! | Russia Imposes Martial Law In 4 Annexed Ukraine

இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு ரஷ்யாவுடன் இணைத்து கொள்ளப்பட்ட நான்கு பிராந்தியங்களிலும் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இப்பிராந்தியங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள்,

ராணுவச் சட்டம்

பொதுமக்கள் கூடுவதற்கு தடை, கடும் சோதனை உள்ளிட்ட கூடுதல் அதிகாரங்களை ஆக்கிரமிப்பு நிர்வாகங்களின் தலைவர்களுக்கு வழங்கப்படும் என்று புடின் தெரிவித்தார். இது தொடர்பான ஆவணங்கள் உடனடியாக கூட்டமைப்பு கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

புடினின் முடிவை அங்கீகரிப்பது கூட்டமைப்பு கவுன்சிலின் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ``பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான எல்லையை மூடும் திட்டம் ரஷ்யாவிடம் தற்போது இல்லை,’’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.