நடுவானில் திறந்த விமான கதவு; உறைந்த பயணிகள் - பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Russian Federation Flight
By Sumathi Jan 13, 2023 11:11 AM GMT
Report

 நடுவானில் பறந்து கொண்டிருந்த விமான கதவு திடீரென திறந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் திறந்த கதவு

ரஷ்யாவில் உள்ள சைபீரிய நகரமான மேகனிலிருந்து IrAero நிறுவனத்திற்கு சொந்தமான ஏஎன்26 ட்வின் ட்ராப் என்ற சிறிய ரக விமானம் ஒன்று 26பயணிகளுடன் பசிபிக் கடற்கரையின் மெகாடன் பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளது.

நடுவானில் திறந்த விமான கதவு; உறைந்த பயணிகள் - பதைபதைக்க வைக்கும் வீடியோ! | Russia Flight Door Opened In Mid Air Flying

அப்பொழுது, மைனஸ் 41டிகிரி குளிர் கொண்ட மேகானிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் பின் கதவு திடீரென திறந்து கொண்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் பயணிகள் அலறியுள்ளனர். வெளிக்காற்று உள்புகுந்ததால் விமானத்திற்குள் கடுமையான குளிர் இருந்துள்ளது.

அதிர்ச்சி வீடியோ

பயணிகளின் அலறல் சத்தத்தை கேட்ட விமானி உடனடியாக அருகே உள்ள விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி உள்ளார் . அந்த விமானி லாவகமாக செயல்பட்டதால், பயணிகள் எந்த ஒரு அபாயமும் இல்லாமல் தப்பினார்கள்.

விமானத்திற்குள் குளிர் காற்று உள்புகுந்த நிலையில், பயணிகள் அனைவரும் குளிர்த்தடுக்கும் உடை அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.