கூகிளுக்கு உலகின் அதிகபட்ச அபராதத்தை விதித்த ரஷ்யா நீதிமன்றம் - எவ்வளவு தெரியுமா?

Google Youtube Russo-Ukrainian War Russia
By Karthikraja Nov 01, 2024 09:00 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

கூகிள் நிறுவனத்திற்கு உலகின் அதிகபட்ச அபராத தொகையை ரஷ்யா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கூகிள்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் கூகிள்(Google). யூ டியூப்(Youtube) போன்ற சமூகவலைத்தளங்கள் கூகிள் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

youtube headquartes

ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா அரசின் ஆதரவு சேனல்களை யூ டியூப் தளத்திருந்து கூகிள் நிறுவனம் நீக்கியது. 

ரூ 22,000 கோடி கொடுத்து முன்னாள் ஊழியரை அழைக்கும் google - என்ன காரணம்?

ரூ 22,000 கோடி கொடுத்து முன்னாள் ஊழியரை அழைக்கும் google - என்ன காரணம்?

கூகிளுக்கு அபராதம்

இதனையடுத்து, 15 க்கும் மேற்பட்ட ரஷ்யா ஊடகங்கள் கூகிள் நிறுவனத்தின் மீது ரஷ்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ரஷ்யா நீதிமன்றம், கூகுள் ஒளிபரப்புச் சட்டங்களை மீறியதாக தீர்ப்பளித்துள்ளது. 

google fined by russia

இந்த தீர்ப்பில், 2 டெசில்லியன் அபராதம் விதித்ததோடு 9 மாதங்களுக்குள் இந்த சேனல்களை மீட்டெடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுளது. அவ்வாறு இணங்கத் தவறும் பட்சத்தில் தண்டனை தினமும் இரட்டிப்பாகும் என்றும் எச்சரித்துள்ளது.  

வன்முறையான நிகழ்வுகளை மறுப்பது, குறைத்தல் அல்லது சிறப்பியல்பற்றதாக ஆக்குவது போன்ற உள்ளடக்கக் கொள்கைகளை மேற்கோள் காட்டி YouTube இந்தத் தடையை நியாயப்படுத்தியது.

2 டெசில்லியன்

ஒரு டெசில்லியன் என்பது 1க்கு பிறகு 34 இலக்க பூஜ்ஜியத்தை உள்ளடக்கியது ஆகும். தற்போது கூகிள் நிறுவனத்திற்கு $20,000,000,000,000,000,000,000,000,000,000,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது உலகின் மொத்தம் ஜிடிபியை விட அதிகம் என கூறப்படுகிறது. உலகின் மொத்த ஜிடிபியே 110 ட்ரில்லியன் டாலர் என்ற அளவிலே உள்ளது. ட்ரில்லியன் என்பது எண்ணிற்கு பின்னால் 12 இலக்க பூஜ்ஜியத்தை உள்ளடக்கியது ஆகும். இந்த அளவு அபராதத்தை கூகிள் செலுத்த சாத்தியமில்லை என கூறப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டே ரஷ்யாவில் உள்ள கூகுளின் துணை நிறுவனம் திவாலானதாக அறிவித்ததோடு, ரஷ்யாவில் விளம்பரம் போன்ற வணிக சேவைகளை வழங்குவதை நிறுத்தியது. இருப்பினும், அதன் தயாரிப்புகள் ரஷ்யாவில் முழுமையாக தடை செய்யப்படவில்லை.