ரூ 22,000 கோடி கொடுத்து முன்னாள் ஊழியரை அழைக்கும் google - என்ன காரணம்?

Google
By Karthikraja Sep 29, 2024 09:29 AM GMT
Karthikraja

Karthikraja

in வணிகம்
Report

முன்னாள் ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க கூகுள் நிறுவனம் 22,000 கோடி அளித்துள்ளது.

கூகிள்

உலகின் முன்னணி தேடு பொறி நிறுவனமான கூகுள், செயற்கை நுண்ணறிவு பிரிவில் வல்லுநராக ஆக கருதப்படும் தனது முன்னாள் ஊழியரை ரூ 22,000 கோடி கொடுத்து மீண்டும் பணிக்கு அமர்த்தியுள்ளது. 

google

2000 ஆம் ஆண்டு கூகிள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த நோவாம் சசீர்(49) (noam shazeer), கூகிள் தேடுபொறியின்(Search Engine) எழுத்துப்பிழை திருத்தியை மேம்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார். 

இனி Password தேவை இல்லை; இது போதும் - google அசத்தல் அப்டேட்

இனி Password தேவை இல்லை; இது போதும் - google அசத்தல் அப்டேட்

ரூ.22,000 கோடி

இதன் பின் சக ஊழியரான டேனியலுடன்(Daniel De Freitas) இணைந்து இவர் உருவாக்கிய சேட் பாட்டை வெளியிட கூகிள் மறுத்தது. இதனால் 2021 ஆம் ஆண்டு கூகிள் நிறுவனத்தை விலகினார். இதன் பின் இருவரும் இணைந்து character.ai என்ற நிறுவனத்தை துவங்கினர். 

noam shazeer Daniel De Freitas character ai

கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. இந்நிலையில் நோவாம் சசீர் மீண்டும் நிறுவனத்தில் சேர்த்து கொள்ள விரும்பிய கூகிள், அதற்காக 2.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 22,000 கோடி) கொடுத்து character.ai நிறுவனத்தை வாங்கியுள்ளது.

கூகிளில் மீண்டும் இணையும் நோவாம் சசீர், கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான டீப் மைண்டில் பணியை தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.