பழனி முருகன் கோவில்.. 6 அடி உயர வேலுடன் வந்த ரஷிய பக்தர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்!
பழனி முருகன் கோவிலுக்கு ரஷிய பக்தர்கள் வேலை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
பழனி கோவில்
திண்டுக்கல் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அதேபோல மலேசியா, சிங்கப்பூர், இத்தாலி, ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், ரஷியாவை சேர்ந்த பெண்கள் உள்பட 5 பக்தர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை; அறிவிப்பு பதாகையை மீண்டும் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
ரஷிய பக்தர்கள்
அவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் நவக்கிரக கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்த வகையில் ரஷிய பக்தர்கள் காலை பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் 6 அடி உயரம், 12 கிலோ எடை கொண்ட பித்தளை வேலை கொண்டு வந்திருந்தனர். பிறகு படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று, முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, மலைக்கோவிலில் உள்ள அலுவலகத்தில் தாங்கள் கொண்டு வந்த வேலை காணிக்கையாக செலுத்தினர். வெளிநாட்டில் இருந்து வந்து பழனி கோவிலில் தரிசனம் செய்ய வருகை தந்தது, மற்றும் வேலை காணிக்கையாக தந்தது மற்ற பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.