புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு - அனைவருக்கும் இலவசமாக வழங்க அரசு திட்டம்
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
புற்றுநோய்
தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு துறைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தற்போது வரை முற்றிலும் குணப்படுத்த முடியாத நோயாக புற்றுநோய் உள்ளது.
கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் புற்றுநோய்க்கு எதிரான முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர்.
ரஷ்யா
இந்நிலையில் புற்றுநோய்க்கு mRNAதடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்து உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
மக்களுக்கு நேரடி சிகிச்சை மூலம் கிடைக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது என்ன மாதிரியான வேக்சின், எப்படி செயல்படும்? என்ன தொழில்நுட்பம்? என்றெல்லாம் விளக்கம் அளிக்கப்படவில்லை.
தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசி
தடுப்பூசி அல்லது தனிப்பயனாக்கப்பட்ட mRNA, கணித அடிப்படையில் மேட்ரிக்ஸ் முறைகளைப் பயன்படுத்துவதால், தற்போது தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு அதிக நேரம் எடுக்கிறது.
AI மற்றும் நியூரல் நெட்வொர்க் கம்ப்யூட்டிங் உதவியுடன், இந்த நடைமுறைகளை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்தில் உருவாக்கி விடலாம் என்று ரஷ்யாவின் தடுப்பூசி தலைவர் கூறினார்.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகளவில் புற்றுநோய் சிகிச்சை சிகிச்சை துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படும்.