இப்படியும் ஒரு காதலரா? காதலிக்காக பணக் கட்டுகளை வைத்து படிக்கட்டு கம்பளம் - வைரல் வீடியோ
பணக்குவியலின் மீது காதலியை நடக்க வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா
காதலியை சந்தோஷப்படுத்த பல வித்தியாசமான முயற்சிகளை காதலர்கள் மேற்கொள்வார்கள். இங்கு ஒரு தொழிலதிபர் அதே போல் ஒரு விசயம் செய்துள்ளார். அதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி கோசென்கோ என்ற தொழிலதிபர் 'மிஸ்டர் நன்றி' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். இதில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பணக்குவியல்
அந்த வீடியோவில் தொழிலதிபரின் காதலி ஒரு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது பணக்கட்டுகளை படிக்கட்டுகளாக அடுக்கி வைத்துள்ளார். மேலும் நடந்தும் செல்லும் போது பணக்கட்டுகளை கம்பளம் போல் அடுக்கி வைத்துள்ளார்.
இந்த வீடியோ 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இவருக்கு பணத்தின் மதிப்பு தெரியவில்லை, இது மோசமானது, பணத்தை அவமதிக்கும் செயல் என பலரும் இந்த வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.