Monday, Jul 14, 2025

காதலியின் தாய்க்கு கிட்னி தானம் அளித்த இளைஞர் - ஆனாலும் ஏமாற்றிய காதலி

Mexico lovecheatingissue fakegirlfriend
By Petchi Avudaiappan 3 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அமெரிக்கா
Report

மெக்ஸிகோவில் காதலிக்காக மிகப்பெரிய தியாகம் செய்த தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞர் ஒருவர் அழுது புலம்பும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

காதலுக்காக பல காதலர்கள் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு செல்வதை நாம் சினிமாவிலும், சில சமயங்களில் நிஜ வாழ்க்கையிலும் கண்டிருப்போம். அந்த வகையில் மெக்ஸிகோவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  தனது காதலை வெளிக்காட்டும் விதமாக காதலியின் தாயாருக்கு தனது ஒரு கிட்னியை தானமாக வழங்கியுள்ளார். 

Baja California பகுதியைச் சேர்ந்த Uziel Martinez என்ற இளைஞர் நடந்த சம்பவம் குறித்து டிக் டாக்கில் வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார்.  அதில் நான் தானம் அளித்த ஒரு மாதத்துக்குள் என்னை ஏமாற்றிவிட்டு என் காதலி வேறு நபரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார் என கூறியுள்ளார். 

அந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்க்க இதனை பார்த்து தர்மசங்கடம் அடைந்த Uziel Martinez தனது காதலி மீது தனக்கு வெறுப்பு ஏதும் கிடையாது. இந்த வீடியோ இத்தனை பேர் பார்க்கும் வகையில் பிரபலமடையும் என நான் எதிர்பார்க்கவில்லை என விளக்கமளித்துள்ளார். 

வழக்கம்போல இந்த வீடியோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.