ஒபாமாவுடன் சேர்த்து 500 பேருக்கு தடை உத்தரவு - அமெரிக்காவுக்கு பதிலடி குடுக்கும் ரஷ்யா!
அமெரிக்கா நாட்டை சேர்ந்த 500 பிரபலங்களுக்கு தன் நாட்டிற்குள் வருவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில், அமெரிக்காவின் செயல்பாட்டினால் அதிருப்தி அடைந்த ரஷ்யா போருக்கு பின்னர் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் பிரிவு ஏற்பட்டது.
இதனால், தற்பொழுது முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்க பிரபலங்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அரசு வெளியிட்டுள்ளது.
இதில் ஒபாமா உள்பட ஸ்டீபன் கால்பெர்ட், ஜிம்மி கெம்மல், செத் மேயர்ஸ் போன்ற முன்னணி தொலைக்காட்சி பிரபலங்களும் இதில் அடங்கியுள்ளனர்.
தடை உத்தரவு
இந்நிலையில், ரஷ்யா அறிவிப்பில், "அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பதிலடி தரும் விதமாக இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ரஷ்யாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தக்க பதிலடி வழங்கப்படும் என்பதை அமெரிக்கா உணர வேண்டும்.
தடைக்கு ஆளான நபர்கள் ரஷ்யாவுக்கு எதிரான போலிக் கருத்துக்களை பரப்பியுள்ளனர். இதில் உள்ள சிலரின் நிறுவனங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.
மேலும், உக்ரைன் நாட்டிற்கு நவீன ஆயுதங்களை கொடுத்து ரஷ்யாவை எதிர்த்து போரிட அமெரிக்க உதவி வருகிறது.
இது ரஷ்யாவுக்கு எரிச்சலுட்டி வரும் நிலையில், தன் பங்கிற்கு இத்தகைய தடை நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளனர்.