ரகசிய தகவல்களை வெளியிட்ட அமெரிக்கா - புதினுக்கு வந்த சோதனை!

United Russia United States of America
By Vinothini May 19, 2023 07:36 AM GMT
Report

 முதன்முறையாக தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் குறித்த ரகசிய தகவல்களை அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளது.

ஸ்டார்ட் ஒப்பந்தம்

ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே 2011-ல், புதிய ஸ்டார்ட் ஒப்பந்தம் போடப்பட்டது. இதுல் இருந்து ரஷ்யா கடந்த பிப்ரவரியில் விலகியது.

america-released-the-secret-publicly

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் விதித்தன.

இதனால் அமெரிக்கா ரஷ்யா உறவு மோசமடைந்து, அதன் விளைவாக, ஸ்டார்ட் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியது.

மேலும், இந்த ஒப்பந்தத்தில் தாக்குதலுக்கு தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் பற்றிய முழு விவரங்களை இரு நாடுகளும் வெளியிட வகை செய்யப்பட்டிருந்தது.

முதலில் இதை ஏற்க மறுத்த அமெரிக்கா, பின்னர் ரஷ்யா மீது அழுத்தம் தரும் நோக்கத்தில் இந்த விவரங்களை திடீரென வெளியிட்டு ரஷ்யாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுதங்கள்

இந்நிலையில், அமெரிக்கா வெளியிட்ட தகவலின் படி தற்போது அமெரிக்கா வசம் உள்ள 5,244 அணு ஆயுதங்களில், 1,419 அணு குண்டுகள், தாக்குதலுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

america-released-the-secret-publicly

இவற்றை ஏவும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 662 என கூறியுள்ளது.

மேலும், ரஷ்யா வசம் தற்போது சுமார் 6,000 அணு ஆயுதங்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 1,600 அணு ஆயுதங்கள், தாக்குதலுக்கு தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவை ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா வசம் உள்ள அணு ஆயுதங்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.