இந்தியாவுக்கு துரோகம் , பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் : டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி கைது
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் கொடுத்த டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி புனேவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி
டி.ஆர்.டி.ஓ. அமைப்பில் பணியாற்றும் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ரகசியங்களை பாகிஸ்தானின் உளவுதுறைக்கு அளித்ததாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படையான ( ATS) அமைப்பினால் புனேவில் கைது செய்யப்பட்டார்.
தேசத் துரோக செயல்
வாட்ஸ் அப் மற்றும் வீடியோ அழைப்புகல் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்ந்து இந்திய நாட்டின் ரகசியங்களை கசிய விட்டு வந்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில் நாட்டின் அச்சுறுத்தலாக அமையும் என தெரிந்தும் விஞ்ஞானி தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக விசாரணை செய்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானம் வெடித்து சிதறிய தருணம்..! அதிர வைக்கும் விபத்து அறிக்கை IBC Tamil

ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி : அமெரிக்க வெளியுறவுத்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிநீக்கம் IBC Tamil
