கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடை: ஐரோப்பிய நாடுகளை அலறவிடும் ரஷ்யா - இந்தியாவுக்கு Luck!
ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
கச்சா எண்ணெய்
ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டாலும்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கியது. ரஷ்யா உக்ரைன் இருநாடுகளுக்கும் இடையேயான போரில் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆதரவ கரம் நீட்டி வருகின்றன.
ஏற்றுமதிக்கு தடை
அத்துடன் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
இதனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.