ரஷ்யாவுக்கு அடுத்த செக் - கனடா அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் போரை நிறுத்த உலக நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றது. அதேசமயம் உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கிடையில் ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தையின் முதற்சுற்று நடந்து முடிந்துள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ள நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பெரும் பொருளாதார வளத்தைக் கொண்ட ரஷ்யாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கனடா அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைனின் வீரமிக்க செயலுக்கு கனடா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான இந்த போரில் உக்ரைனுக்கு ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதம் மற்றும் நவீன ஆயுதங்களை கனடா வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.