மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ தற்கொலை - மகளால் நடந்த விபரீதம்!

Death Namakkal
By Sumathi Jul 07, 2025 08:51 AM GMT
Report

வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

குடும்ப விவகாரம்

நாமக்​கல், கலை​வாணி நகரைச் சேர்ந்​தவர் சுப்​பிரமணி​யன்​(55). இவர் திருச்​சி​யில் வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வல​ராகப் பணிபுரிந்து வந்​தார். இவரது மனைவி பிரமிளா (51).

சுப்​பிரமணி​யன் - பிரமிளா

அரசு உயர்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரியை​யாகப் பணிபுரிந்து வந்​தார். இவர்​களது மகள் சம்​யுக்தா (25). மகன் ஆதித்யா (21). இந்நிலையில், நாமக்​கல்​-கரூர் ரயில்வே தண்​ட​வாளத்​தில் சுப்​பிரமணி​யன் மற்​றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் உடல் கிடந்தது.

இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்திய கணவன் - ரிதன்யாவின் தாய் கதறல்

இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்திய கணவன் - ரிதன்யாவின் தாய் கதறல்

பெற்றோர் தற்கொலை

தகவலறிந்து விரைந்த போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவரும் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவரது மகளோ வேறு ஒருவரை காதலிப்பது ஆகவும் அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ தற்கொலை - மகளால் நடந்த விபரீதம்! | Rto Officer Wife Suicide For Daughter Love Namakal

தொடர்ந்து எவ்வளவு பேசியும் மகள் சம்மதிக்காததால், மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.