கடந்த 5 ஆண்டுகளில் 20% MBC இட ஒதுக்கீட்டில்.. - RTI மூலம் வெளிவந்த தகவல்!
தமிழ்நாட்டில் 20% உள்ள MBC இட ஒதுக்கீட்டில் பெருமளவில் பயன்பெறுபவர்கள் வன்னியர்களே என்று RTI மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% சதவீத உள் ஒதுக்கீடு கோரி பாமக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ள 20% சதவீத MBC ஒதுக்கீட்டில் அதிகளவு வன்னிய சமூக மக்கள் அரசுப் பணிகள் மற்றும் கல்விச் சேர்க்கையில் பயன்பெற்று வருவது RTI மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
RTI வெளியிட்டுள்ள அறிக்கையில்..
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) மூலம் சார் ஆய்வாளர் பணியிடங்களில் 17% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் (MRB) மூலம் உதவி மருத்துவர் பணியிடங்களில் 10.8% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்.
வனச் சீருடை பணியாளர் தேர்வுக் குழு மூலமாக 11.8% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்.
20% சதவீத MBC இட ஒதுக்கீட்டில்:
TNPSC குரூப்-1 பணியிடங்களில் 11.6% சதவீதமும், TNPSC குரூப்-2 மற்றும் 2A பணியிடங்களில் 11.2% சதவீதமும், TNPSCகுரூப்-3 பணியிடங்களில் 11.4% சதவீதமும், TNPSCகுரூப்-4 பணியிடங்களில் 19.5% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்.
TNPSC ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான தேர்வில் 10.2% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர் TNPSC சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் 9.9% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்.
MBBS மாணவர் சேர்கை..
மருத்துவத்துறை மேற்படிப்புகளில் 10.2% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும்,BDS பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 9.4% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும் MDS பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 9.6% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும்,
கால்நடை அறிவியல் படிப்பில் 13% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும், ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 7.6% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும் சேர்ந்து கல்வி பயின்றுள்ளனர்.
சட்டக் கல்லூரி படிப்பு..
மேலும் ,அரசு சட்டக் கல்லூரி படிப்புகளுக்கான மாணவர் சேர்கையில் 8.3% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்கையில் 10.3% சதவீதம் வன்னியர் சமூக மாணவர்களும் சேர்ந்து கல்வி பயின்றுள்ளனர்.
அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் 10.8% சதவீதம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றுப் பணி கிடைக்கப் பெற்றுள்ளனர்